ஜன.2.
6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்விபயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டை வழங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல் மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார்.
இநிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,
முதலமைச்சர் அவர்கள், பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசுப் பள்ளியிங படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக புதுமைப்பெண் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் தொடங்கிவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகள் உயர் கல்வி பயில புதுமைப்பென் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000. வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 46 கல்லூரிகளில் பயிலும் 5244 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இன்றைய தினம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ்வழி பயின்ற மாணவிகளுக்கும் உயர்கல்வி பயிலும் புதுமைப்பெண் திட்டத்தினை வழங்கியதைத் தொடர்ந்து 37 கல்லூரிகளில் பயிலும் 1258 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் நோக்கம் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும். ஓர் பெண் கல்வி கற்பதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேற்றம் அடையும். எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு மாணவிகள் தாங்கள் பயிலும் துறையில் சிறந்த வல்லுநர்களாக உருவாக வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி, ஆர்டிஓ முகமதுபைசல், அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சுதா, மாண்டல குழு தலைவர் கனகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.