ஜன.20.
இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஜ்கர்மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். 3ம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனையொட்டி திருச்சி பஸ் நிலையம் அருகே விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு 129 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அவர் கூறுகையில், ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். அதன்படி வேலை வழங்கப்படும் . தற்போது புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும் என்றார்.