ஜன.22.
எஸ்எஸ்எல்சி. பயிலும் 8105 மாணவ மாணவியருக்கும், பிளஸ்2 பயிலும்
6656 மாணவ மாணவியருக்கும் வினா விடை வங்கி புத்தகங்களை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, அமைச்சர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 130 பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில், 10ம் வகுப்பு பயிலும் 8105 மாணவ மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் வினா விடை வங்கி புத்தகங்கள், மற்றும் +2 பயிலும் 6656 மாணவ மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வரலாறு, உயிரியல், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் முதலிய பாடங்களில் வினா விடை வங்கி புத்தகங்களை இலவசமாக, வழங்கும் நிகழ்வினை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் இன்று வழங்கினார். கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு புத்தகங்களை அமைச்சர் வழங்கி துவக்கி வைத்தார்.