ஜூன்.14.
போலீஸ் டிஜிபி, ஐஜி, அறிவுரைப்படியும், டிஐஜி வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட எஸ்.பி. மேற்பார்வையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும்; தீவிர சோதனைகள் நடத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களையும், ரவுடித்தனம் செய்பவர்களையும் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
அதன்படி 13.06.2025 கரூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமானுஜம் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தி,அருவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டுக்கொண்டு சிலர் இடையூறு செய்து வருவதாக தகவல் கிடைத்தது. கரூர் மாவட்ட ரவுடி தடுப்பு பிரிவு போலீசார் விரைந்தனர்.
1) கோகுலகண்ணன், 22/JJ நகர், ராமானுஜம் நகர், கரூர் 2) சூரியபிரகாஷ், 18/ JJ நகர், ராமானுஜம் நகர், கரூர். 3) கௌதம் 23. முனியப்பன் கோவில் தெரு,மேற்கு மட விளாகம்,கரூர்.4) சுஜித், 15. வையாபுரி நகர் முதல் தெரு, கரூர் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களிடமிருந்து பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட 3 வீச்சு அருவாள் மற்றும் நான்கு கத்திகள் மற்றும் சேவல் சண்டை கத்திகள் 02 மற்றும் சில ஆயுதங்கள் கைப்பற்றினர்.
இதேபோல் கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக பட்டா கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 1) தினேஷ்குமார், 25/ ரத்னசாலை,கரூர். 2)சந்துரு, 23/மேற்குபிரதட்ணம்ரோடு கரூர், 3)சுரேஷ், 22/25,KMC காலனி, ரத்தினசாலை,கரூர். 4) ஜினித், 18/25,சேர்மன் ராமானுஜம் தெரு, கரூர். 5) கணேஷ், 17/ வடக்கு லட்சுமிபுரம், கரூர் 6) ஆகாஷ், 21/25 பெரியசாமி நகர், 2வது கிராஸ், சின்னாண்ட கோவில் கரூர் ஆகியோர்களை பிடித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேற்படி இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவல் பெற்று, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து, பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் (Trouble Mongers)மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான்அப்துல்லா, எச்சரித்துள்ளார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் (ரவுடி தடுப்பு பிரிவு)மற்றும் கரூர் நகர காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்களை பாராட்டி வெகுமதி அளித்தார்.