• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Wednesday, October 22, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

தன்னார்வ சட்டப் பணியாளர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்

karurxpress by karurxpress
October 15, 2025
in கரூர்
0
162
VIEWS

அக்.15.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர்/மாவட்ட நீதிபதி விடுக்கும் அறிவிப்பு:-

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வ சட்டப்பணியாளராக சேவை புரிய விருப்பமுள்ள உள்ளூர் குடியிருப்போர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய சட்டப்பணிகள் குழுவிற்கும் தன்னார்வ சட்டப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மேற்படி தன்னார்வ சட்டப்பணியாளருக்கான கடமை சேவை மட்டுமே; இது நிரந்தர பணிக்கானது அல்ல. முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த கௌரவ ஊதியம் மட்டுமே அளிக்கப்படும். மேலும் தன்னார்வ சட்டப்பணியாளராக விண்ணப்பிக்க ஆசிரியர்கள் (ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் சமூகப் பணியில் முதுநிலைக் கல்வி M.S.W.) பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கள்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள்/உடல் நல நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் (அவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்யம் வரை). அரசியலற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்கப் பிரமுகர்கள் மகளிர் குழுக்கள், மைத்ரிசங்கங்கள் மற்றும் வறியோரை உள்ளடக்கிய சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தகுதியானவர்கள்.

தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தில் இருத்து (https://karur.dcourts.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகின்ற 25.10.2025 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் தேதி, இடம் மற்றும் இதர விபரங்களை மேற்குறிப்பிட்டுள்ள கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு தபால் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி தலைவர்/மாவட்ட நீதிபதி. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ADR கட்டிடம், பழைய மாவட்ட நீதிமன்ற வளாகம், 5 ரோடு, கரூர்-639 001.

இவ்வாறு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், கரூர் மாவட்ட நீதிபதி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Posts

வாகனங்கள் பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு

by karurxpress
October 15, 2025
0

கரூர்.அக்.15. கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகள், கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல்...

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள்

by karurxpress
October 12, 2025
0

கரூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்று பெறாத...

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 5, 2025
0

அக். 5. கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்...

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

by karurxpress
October 5, 2025
0

அக்.5. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12:14 ஏக்கர் பரப்பளவு...

Load More
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved