கரூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்று பெறாத மாற்றுத்திறனாளிகள் எளிதாக அடையாள அட்டை, மருத்துவ சான்று பெறும் பொருட்டு மருத்துவ முகாம்கள் பின்வருமாறு நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் கை, கால்இயக்க குறைபாடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதம், குள்ளத் தன்மை தசைசிதைவு நோய், அமிலவீச்சினால் பாதிக்கப்பட்டோர், பார்வையின்மை, குறைபார்வைமின்மை, செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அறிவாளனு இரத்த சோகை, இரத்தஅழிவு சோகை, )இரத்த உறையாமை. இரத்த ஒழுக்க குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை தோறும்,
அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, புறஉலக மனநோய், நாள்பட்ட நாம்பியல் பாதிப்பு, திசு பன்முகக் கடினமாதல், நடுக்குவாதம், இயல்வகை குறைபாடுஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை (பழைய வளாகம்) மாவட்ட ஆரம்ப கால பயிற்சி மையத்தில் மருத்துவ முகாம் நடைபெறும்.
மேலும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்கிழமை தோறும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குளித்தலையிலும், அணைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெறும்.
கரூர் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மேற்காணும் முகாம்களில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04324 -257130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.












