அக்.27.
கரூர் வெண்ணமலை பிஎஸ். ஸ்போர்ட்ஸ் அரேனா மைதானத்தில், தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 15வது தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளை துவக்கி வைத்து, வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ஸ்பீட் ஸ்கேட்டிங் பெடரேஷன் தலைவர் கிருஷ்ணபைஸ்வர், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கத் தலைவர் முருகானந்தம், பொதுச்செயலாளர் கௌதம், துணைத் தலைவர் மணிகண்டன், சீனியர் வைஸ் ப்ரெசிடெண்ட் சந்திரமோகன் பால்ராஜ், இணைச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சாந்தி, துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஸ்கேட்டிங் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.















