அக். 24.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றத
கலெக்டர் பேசுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிCOs R2BPT.CO.COs2ஆகியநெல்ரகங்கள் 35000 மெட்ரிக்டனும் சிறுதானியங்கள் கம்பு கோ சோளம் Co32, K12 ஆகியவை 12,000 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிர்கள் உளுத்து VBN& VBN 10. கொள்ளு பைபூர்2 தட்டைப்பயறு VBN3 ஆகியவை 15000 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை Ka2 கோ.7 எ. VRIA டிஎம்.வி.7ஆகியவை 3500 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு அக்டோபர் 2025 வரை 403.16 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 90.54 மி.மீ.குறைவாக மழை பெய்துள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழை நாட்களில் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வெளியேற்றி வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். பயிர்களில் நோய்த் தாக்குதலைத் தடுக்க ஈரப்பதத்தால் ஏற்படும் பூஞ்சான் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் அலுவலர்களின் அறிவுரைப்படி பூஞ்சாண உயிரியல் கொல்லி மருத்துகளைப் பயன்படுத்தலாம்.
மழைக்காலங்களில் ரசாயன உரம் இடுதல் பூச்சி மருந்து தெளித்தல் களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மழை நின்ற பிறகு. போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டால், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேளாண் துறையின் பரித்துரைப்படி இலைவழி உரங்களைத் தெளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், விமல்ராஜ் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், வேளாண்.அலுவலர் உமா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சாந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் தியாகராஜன், கலந்து கொண்டனர்.












