அக். 14
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் எண்.06297 கே.எஸ்.ஆர் பெங்களூரு- தூத்துக்குடி சிறப்பு ரயில் 17.10.2025 மற்றும் 21.10.2025 ஆகிய தேதிகளில் இரவு 22.00 மணிக்கு கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு (2 சேவைகள்) மறுநாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
ரயில் எண்.06298 தூத்துக்குடி – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் 18.10.2025 மற்றும் 22.10.2025 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு (2 சேவைகள்) மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.
பெட்டிகள் – ஏசி முதல் வகுப்பு, ஏசி 2-டயர், ஏசி 3-டயர் & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிட வசதியுடன்) பெட்டிகள்.
நிறுத்தங்கள்: பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர்.
சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வரும் நேரங்கள்- ரயில் எண்.06297 KSR பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில்: (18.10.2025 & 22.10.2025 அன்று சேலம்03.30/03.40 மணி: நாமக்கல்04.40/04.41 மணி: கரூர்-05.30/05.31 மணி: திண்டுக்கல் 07.10/07.15.
ரயில் எண்.06298 தூத்துக்குடி – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில்: (18.10.2025 அன்று & 22.10.2025 திண்டுக்கல் 18.40/18.45 மணி, கரூர் 20.15/20.17 மணி, நாமக்கல்-20.50/20.51 மணி. சேலம்-22.05/22.15 மணி. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.











