ஜூலை.9.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அனைத்து அரசு துறைகளில் பணிகள் குறித்த ஆய்வு கட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கெட்ட பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதிப்யாதவ், முன்னிலை வகித்தனர். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் உமா, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்பி. பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . தாந்தோணி மலை தளிர் மகளிர் சுய உதவி குழுவினருடன் துணை முதலமைச்சர் கலந்துரையாடினார். பின்னர் கரூர் பிரேம் மஹாலில் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.












