ஆக.3.
திருச்சிராப்பள்ளியில் ‘OHE’ (மின்சார இன்ஜின்களுக்கு மின்சாரம் கடத்தும் மேல்நிலை உபகரணங்கள்) பராமரிப்பைக் கருத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு- திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், காலை 08.10 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயிலானது, இது ஆகஸ்ட் 05 & 19, 2025 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்தில் குறுகிய கால நிறுத்தப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி கோட்டைக்கு மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் திருச்சிராப்பள்ளி கோட்டையிலிருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு இயக்கப்படாது.
ரயில் எண்.16843
திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயிலானது திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், 2025 ஆகஸ்ட் 05 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.12 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து திருச்சிராப்பள்ளி கோட்டைக்கு இயக்கப்படாது; அந்த நாட்களில் திருச்சிராப்பள்ளி கோட்டையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை இயங்கும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.











