ஜூலை. 25.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC GROUP I & IIA காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் 13.08-2025 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30-07-2025 முதல் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard இலவச Wifi வசதி அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள் (Spot test) வாராந்திரத் தேர்வுகள், இணைய வழித் தேர்வுகள் (online test) முழு மாதிரி தேர்வுகள் மென்பாடக் குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட TNPSC-Gr-1, TNPSC-Gr-2, Gr-4. TNUSRB, TRB ஆகிய தேர்வுகளில் அதிகபடியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரித்து வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 Passport Size புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324-223555 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு தெரிலிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.












