அக்.8.
ரயில் சேவைகளில் மாற்றங்கள்
அக்டோபர் 10 & 13, 2025 அன்று அம்பாத்துரை மற்றும் கொடைக்கானல் சாலை ரயில்வே யார்டுகளில் (திண்டுக்கல் - மதுரை இடையே அமைந்துள்ளது) தண்டவாள பராமரிப்பு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண்.16322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், 10.10.2025 மற்றும் 13.10.2025 அன்று திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். அந்த நாட்களில் மட்டுமே கோவை சந்திப்பிலிருந்து திண்டுக்கல் சந்திப்பிற்கு ரயில் இயக்கப்படும்.
பயணிகளின் நலனுக்காக, அந்த நாட்களில் திண்டுக்கல் சந்திப்பிலிருந்து நாகர்கோவில் சந்திப்பிற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து 15.30 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரயில் எண்.16322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்.
ரயில் எண்.16353 கச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் 12.10.2025 13.10.2025 அன்று திருச்சிராப்பள்ளி - விருதுநகர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, திண்டுக்கல் மற்றும் மதுரையில் நிறுத்தத்தைத் தவிர்க்கும். இருப்பினும், இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மாற்று நிறுத்தத்தில் நின்று செல்லும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்: மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
நவ.13பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நவம்பர் 13 &...











