ஜூலை.21.
கரூர் மாவட்ட 34வது எஸ்.பி.யாக ஜோஷ் தங்கையா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றவுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும், சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும், குற்றங்களை தடுக்க அதிக அளவில் CCTV கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தற்போது பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நட்புணர்வு பேணப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் சூதாட்டம், லாட்டரி, மணல் திருட்டு தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி காவல் நிலையங்களை கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்
கரூர்.நவ.9. கரூர் விஷன் 2030- வளரும் கரூர் என்கிற முன்னெடுப்பில் ரூ. 50...












