அக்.31.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் – கலெக்டர் தங்கவேல் தெரிவித்ததாவது.:-
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் 01-01.2026 ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு திருத்தத்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கரூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision SIR ). வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தகுதியுடைய புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது (குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்).
இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் அல்லது தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்குவது போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் சரியான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் உறுதிசெய்யப்படும். கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு பணி அடையாள அட்டை அணிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வருகின்ற 4-11-2025 முதல் 4-12-2025 வரை நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் 9-12-2025 அன்றும், ஆட்சேபனை தெரிவிக்க அல்லது திருத்தங்கள் கோர 9.12.2025 முதல் 8.01.2026 வரையிலும், புகார்கள் சரிபார்ப்பு 9-12-2025 முதல் 31-01-2026 வரையிலும் நடைபெறுகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல் 7.02.2026 அன்று வெளியிடப்படும். இதன் மூலம் அனைத்து தகுதியுள்ள குடிமக்களுடைய பெயர்களும் இடம் பெறுவதை உறுதி செய்து, தகுதியற்ற வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும். தமிழ்நாட்டில் கடைசியாக 2025ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற்றது. இந்த நடவடிக்கைகள் மூலம் எந்தவொரு முரண்பாடுகளும் ஆரம்ப நிலையிலேயே தீர்க்கப்பட்டு, புகார்கள் எதிர்ப்புகள் மற்றும் மேல்முறையீடுகள் தாக்கல் குறைக்க இயலும்,
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யாருடைய பெயரையும் சரியான விசாரணை மேற்கொள்ளாமல் நீக்கக் கூடாது. அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் 15 நாட்களுக்குள் முறையிடலாம். அதிலும் திருப்தி இல்லை எனில் 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாமென கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா. தேர்தல் வட்டாட்சியர் முருகன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












