ஜூலை.10.

கரூர் திருமாநிலையூரில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காவிரி மீட்பு குழுவின் உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்பி முத்துச்சாமி அவர்கள் திருவுருவச் சிலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை, கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 18332 பயனாளிகளுக்கு ரூ 162 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடைகளை ஏற்படுத்தினார்கள். வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் செந்தில் பாலாஜி அவருக்கே உரிய பாணியில் இந்த வழக்கிலும் வெற்றி பெற்று புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். எம்.பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், டிஆர்ஓ. கண்ணன். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலங்கா தமிழ்செல்வன், மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் தாரணி சரவணன் மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.













