கரூர் நகர உட்கோட்டம்,வாங்கல் சரகம், ஈ.வே.ரா தெருவில் வசித்துவரும் ராணி என்பவருக்கு காவிரி ஆற்றிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள புறம்போக்கு நிலத்தில் (B Memo land) சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.அதில் அவர் விவசாயம் செய்தும்,செங்கல்சூளையும் நடத்தி வருகிறார்.இவரது இடத்திற்கு அருகில் உள்ள பூமா என்பவருக்கு சொந்தமான 50 சென்ட் இடத்திற்கு மேற்படி ராணி ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து பேசியுள்ளார். அதே இடத்தை கவியரசன் என்பவர் பூமாவிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். ராணியின் இடத்தை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்குவதற்கு மணிவாசகம் கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். மேற்படி நிலத்தை ராணியிடமிருந்து வாங்க மணிவாசகம் விலை பேசி முடித்திருந்த நிலையில் வாங்கல் வெங்கடேசன், ராம்குமார் மற்றும் கவியரசு ஆகியோர் ராணியிடம் மேற்படி நிலத்திற்கு அதிக விலை கொடுப்பதாக கூறி பிரச்சனை செய்துள்ளனர். இந்த இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில், 13.07.2025 ஆம் தேதி மாலை சுமார் 19.30 மணியளவில் மேற்படி ராணியின் இடத்திற்கு மேற்படி மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன், மற்றும் ஆனந்த் ஆகியோர் சென்றிருந்தபோது, அப்போது அங்கு வந்த வாங்கலை சேர்ந்த வெங்கடேசன்,ராம்குமார், கோபி, மணிகண்டன், செந்தில், கவியரசு, விவேக் மற்றும்சிலரும் அங்குவந்து, மேற்படி இடப்பிரச்சனை காரணமாக மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன், ஆனந்த் மற்றும் ராணி மற்றும் ராசம்மாள் ஆகியோரை கெட்ட வார்த்தைகளால் திட்டி அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தலை, கை, கால்களில் வெட்டியுள்ளார்கள். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த மணிவாசகம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மேலும் இதில் காயமடைந்த யோகேஸ்வரன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை KMCH மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து இறந்துபோன மணிவாசகத்தின் மனைவி அளித்த புகாரைபெற்று வாங்கல் காவல் நிலையத்தில் வெங்கடேசன், ராம்குமார், கோபி, மணிகண்டன், செந்தில், கவியரசு, விவேக் மற்றும் சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இக்கொலை வழக்கில் தொடர்புடைய வாங்கல் ஈ.வே.ரா தெருவை சேர்ந்த 1) வெங்கடேசன், 41/25, 2) கவியரசன், 3) விவேக், 27/25, 4) மணிகண்டன், 32/25, மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 5) சந்திரபிரகாஷ், 25/25. 6) கிருஷ்ணன், 26/25, பெருந்துறை, 7) நிஜாமுதீன், 40/ ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8) செந்தமிழ், 31/25 ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்
கரூர்.நவ.14. கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TN...












