நவ.3.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்பில் (காலியிடங்கள் Dialysis Technician 11, Anaesthesia Technician 16. Theatre Technician 12, Emergency Care Technician 13) சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இச்சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவில் அவசியம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.12.2025 அன்று 17 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். உட்சபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்ப படிவங்கள் 14.11.2025 வரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேனிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். மாற்றுச் சான்றிதழ். இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். வயதுச் சான்று. மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்) ஆதார் அட்டை நகலுடன் இணைத்து 14.11.2025 மாலை 05.00 மணிக்குள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்விக்கட்டணமாக ரூ.1,450/- மட்டும் பெறப்படும். இதர கட்டணங்கள் ஏதும் இல்லை. இது குறித்து கூடுதல் விபரங்கள் தேவைப்படின் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தினை நேரில் அனுகலாம். தொலைபேசி (04324- 242281) அல்லது https://karurgmc.ac.in/course.php
என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம். இதில் சேரும் மாணாக்கர்கள் தமிழக அரசின் விதிகளுக்குட்பட்டு, “வெற்றி நிச்சயம்”, புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறலாம். மேலும் இச்சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் வேலை பெற வாய்ப்புள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.












