நவ.5.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 09.11.2025 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை 1) கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, வெண்ணமலை (ஆண்கள்) . 2) கரூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணமலை (பெண்கள்). 3) கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணமலை (ஆண்கள்) ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்களின் வசதிக்காக கரூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து 09.11.2025 ஆம் தேதி காலை 07 மணி முதலும், மற்றும் எழுத்து தேர்வு முடிவுற்று மேற்படி தேர்வு மையங்களில் இருந்து மதியம் 01.30 மணிக்கு பேருந்து நிலையம் செல்லவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் தேர்வு மையத்தின் இடத்தினை குறிக்கும் QR Code இணைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வாளர்கள் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கேட்டுக்கொண்டுள்ளார்.













