நவ.3.
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 2810.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) நாளை (04.112025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு 04122025-க்குள் மீள பெறப்படும். அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் கூட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கைபொப்பமிட்ட ஒரு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீள வரும்போது சமர்ப்பித்திட வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி இத்திருத்தப்பணிகள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அரவக்குறிச்சி சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 04320 230170 135, கரூர் சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 04234 260745. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 04323 243366 . குளித்தலை சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 04323 222395 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950 – ஐ. வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்- கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.












