ஆக6.
கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து (ஆண்-37/பெண்-05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. கல்வித்தகுதி 10-வகுப்பு தேர்ச்சி/தவறியவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 31.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.மேலும் 31.07.2025 அன்று 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாதம் ஒன்றிக்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். நாள் ஒன்றிற்கு 560/- வீதம் 5 நாட்களுக்கு 2800/- ஊதியமாக வழங்கப்படும். ஊர்க்காவல் படை ஆளிநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 06.08.2025 முதல் 20.08.2025 வரை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம், 2.கல்வித்தகுதிக்கான சான்றிதழ், 3.புகைப்படங்கள் ஆகியவற்றை கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 22.08.2025-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கவும். இத்தகவலை கரூர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.












