ஜூலை.15.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சி வாங்கப்பாளையத்தில் கரூர் மாவட்ட தங்கவேல் தலைமையில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செந்தில்பாலாஜி பேசுகையில்,
கரூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டமானது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 179 இடங்களில் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. ஊரகப் பகுதிகளில் 101 முகாம்களும். நகர்புற பகுதிகளில் 78 முகாம்களும் நடத்தப்படுகிறது. நகர்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் வழங்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், இத்திட்டத்தில் 519 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று முகாம்கள் நடைபெறும் இடங்கள். துறைகள். உத்தரவுகள் மற்றும் வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன என தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பாக 1 பயனாளிக்கு ரூ. 8.440 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோலும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி தொகுப்பினையும் மற்றும் மாநகராட்சியின் சார்பாக 5 நபர்களுக்கு சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ. 7:16 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை செந்தில்பாலாஜி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், மாநகராட்சி மேயர் வெ கவிதா. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஆர்டிஓ. முகமது பைசல், மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன். மண்டலக்குழு தலைவர்கள் சக்திவேல், கனகராஜ். அன்பரசன், ராஜா, மாவட்ட மேலாளர் தாட்கோ முருகவேல், மாமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டனர்.












