கரூர், ஆக.25.
கரூர் மாவட்ட தடகள சங்கம் நடத்தும் 28வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட தடகளப் போட்டிகள் வருகின்ற 06-09-2025 மற்றும் 07.09.2025 தேதியில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் தாந்தோன்றிமலையில் நடைபெற உள்ளது. இத்தடகள போட்டிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சிபெறும் இளம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் (10, 12, 14, 16, 18, 20 வயது), மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் 14, 16, 18, மற்றும் 20 வயதிற்க்கு உட்பட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர், மாணவியர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து செப்டம்பர் மாதம் செங்கல்பட்டில் நடைபெறும் 30 வது இளையோர்களுக்கான மாநில தடகளம் போட்டிகளில் மாவட்டத்தின் சார்பாக பங்கேற்க உள்ளார்கள்.
ஆகையால் தாங்கள், தங்கள் பள்ளி/கல்லூரிகளில் பயிலும் தடகள வீரர்களை தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்குமாறு அம்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வீரர்கள் தங்களது பதிவினை இணைக்கப்பட்டுள்ள Online Excel படிவத்தில் பூர்த்திசெய்து கீழ்கண்ட Mail Idக்கு 03-09-2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மற்றவை ஏற்றுக்கொள்ளைபட மாட்டாது (Mail Id: athleticassociationkarur@gmail.com) பொது பிரிவு (Spot Entry Only)
06:09:2025 அன்று மாணவர்களுக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்படும் காலை 7 மணி முதல். 07-09-2025 அன்று மாணவிகளுக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்படும். காலை 7 மணி முதல். வயது சான்றிதழ், ஆதார் அட்டை, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் எடுத்துவர வேண்டும். ஒருவர் இரண்டு போட்டிகளில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளருக்கு நுழைவுக்கட்டணம் ரூ 100/- தொடர் ஓட்டப்போட்டிக்கு ஒரு அணிக்கு ரூ 200 செலுத்திய பின்னரே மார்பு எண்கள் வழங்கப்படும். 03.09:2025 க்கு பிறகு பிறகு வரும் நுழைவுப்படிவம் ஏற்கப்படமாட்டாது. தொடர்புக்கு அலைபேசி எண்கள்
94434-10009, 94431-5558, 97510-03607, 96556-97755. இத்தகவலை கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் செல்வம், சங்க செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளனர்.












