கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் சரகம், கரூர் செங்குந்தபுரம் மெயின் பழனிச்சாமி, வயது 78, என்பவர் சொந்தமாக ராஜா என்ற பெயரில் பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 21.02.2025 அதிகாலை 05. மணியளவில் பால்பண்ணையை திறக்க வந்தபோது வெள்ளை நிற Swift Desire காரில் வந்த அடையாளம் தெரியாத 03 நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 18.07.2025 ஆம் தேதி அதிகாலை கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஷேர் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் மாரிமுத்து, வயது 75, கௌரிபுரம் கிழக்கு, கரூர் என்பவரிடம் அடையாளம் தெரியாத 05 நபர்கள் அவரின் மாருதி Omni காரை வாடகைக்கு எடுத்து மாங்காசோளிபாளைம் இரயில்வே கேட் அருகில் உள்ள புதிதாக வீட்டுமனை பிரித்து வைத்திருக்கும் இடத்தில் உள்ள தகர செட்டில் மேற்படி மாரிமுத்துவை அடைத்தனர். அவருடைய Omni கார், செல்போன் மற்றும் பணம் ரூ. 600/-யை கொள்ளையடித்து சென்றனர். கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கரூர் நகர உட்கோட்ட டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் டவுண் இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்தனர். புலன் விசாரணை செய்தபோது, இச்சம்பவத்தில் தொடர்புடைய 1) பகவதி நாராயணன் ராஜா, வயது 24, பஞ்சலிங்கபுரம் 4வது தெரு, கன்னியாகுமரி 2) மாரிமுத்து, வயது 30, குளத்துக்கரை, கன்னியாகுமரி 3) விக்னேஸ்வரன், வயது 19, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், கொட்டாரம், பெருமாள்புரம், கன்னியாகுமரி 4) முத்துவீரன் (எ) முத்துக்குமார், (19),சந்தக்கரை ரவுண்டானா, கன்னியாகுமரி 5) செல்லமுத்து, வயது 18, , சந்தக்கரை ரவுண்டானா, கன்னியாகுமரி 6) சுரேஷ், வயது 19, பால்குளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி 7) கிருஷ்ணா, வயது 18, , சந்தக்கரை ரவுண்டானா, கன்னியாகுமரி 8) தமிழரசு, வயது 18,, அஞ்சு கிராமம், கன்னியாகுமரி ஆகியோரை கன்னியாகுமரியில் கைது செய்தனர். கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பகவதி நாராயணன் ராஜா என்பவர் பால் பண்ணையில் 03 மாதம் வேலை பார்த்ததாகவும், இவரிடம் பண புழக்கம் அதிகமாக இருந்ததால் கடத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்த முயற்சி செய்ததாகவும் கன்னியாகுமரியில் ஏற்கனவே கொலை மற்றும் குற்ற வழக்கில் தொடர்புடைய ஆட்களை அழைத்து கரூருக்கு வந்து வாடகை காரை எடுத்து ஓட்டுனரை கட்டி வைத்து, செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து ஏற்கனவே மேற்படி பழனிச்சாமி என்பவரை கடத்த முயன்றபோது பயன்படுத்திய Swift Desire கார் மற்றும் Omni கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி 08 நபர்களை கரூர் நீதிமன்ற நடுவர் எண். 1 அவர்களிடம் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
எதிரி 6) சுரேஷ் என்பவர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் 03 குற்றவழக்குகளும், எதிரி 4) முத்துவீரன் (எ) முத்துக்குமார் என்பவர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை வழக்கும், எதிரி 3) விக்னேஸ் என்பவர் மீது கொலை வழக்கும், எதிரி 2) மாரிமுத்து என்பவர் மீது கன்னியகுமரி மாவட்டத்தில் 08 வழக்குகளும், சேலம் மாவட்டத்தில் ஒரு குற்றவழக்கும் பதிவு செய்யபட்டுள்ளது.
மேற்படி கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார்களை மீட்ட டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் போலீசார் அனைவரையும் கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா வெகுவாக பாராட்டினார்.












