கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பேசுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யூரியா 1115 மெட்ரிக் டன்னும், டிபி 401 மெட்ரிக் டன்னும். பொட்டாஷ் 951 மெட்ரிக் டன்னும் என்.பி.கே. 1447 மெட்ரிக் டன்னும் மொத்தம் 3914 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் C055, R20, BPT, CO50, CO52 180.00 மெட்ரிக் டன்னும், சிறுநானியங்கள் கம்பு கோ 10. சோளம்: Co32. K12 ஆகியவை 1300 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிர்கள் உளுந்து -VBN-6 & VBN-10. கொள்ளு பையூர் 2. தட்டைப்பயறு VBN-3 ஆகியவை 36.00 மெட்ரிக் டன்னும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை K1812 கோ-7. air-VRI-4, டிசம்.வி-7 ஆகியவை 5.00 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஜீலை-2025 வரை 151.32 மி.மீ மழை பெய்துள்ளது. 32.68 மி.மீ குறைவாக மழை பெய்துள்ளது. அதே போல் கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் குளித்தலை. பள்ளப்பட்டி வேலாயுதம்பாளையம், வெங்கமேடு மற்றும் காந்திகிராமம் ஆகிய 6 உழவர் சந்தைகளில் நாளொன்றிற்கு 46.68 மெ.டன் காய்கறிகள் ரூ. 20.97 இலட்சம் மதிப்பீட்டில் வரப்பெற்றுள்ளது. 395 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப மழையை நம்பி விவசாயிகள் மாணவரிப் பயிர்களை சாகுபடி செய்வார்கள். மானாவாரிப் பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த மாதமாகும். ஆடி மாதத்தில் பருவ மழையை எதிர்பார்த்து விதைகளை விதைக்க வேண்டும். இந்த மாதத்தில் பெய்யும் மழை பயிர்கள் செழித்து வளர ஏற்றதாக இருப்பதால் விவசாயிகள் ஆடி மாதத்தில் விதைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். எனவே கரூர் மாவட்டத்தில் ஆடிப் பட்டத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன். விமல்ராஜ் (நிலமெடுப்பு). குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் சுப்பிரமணியம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தியாகராஜன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சாந்தி, வேளாண். அலுவலர் உமா கலந்துகொண்டனர்.












